மக்களை பிரிப்பதும் கொள்ளையடிப்பதும்தான் காங்கிரசின் கொள்கை: பிரதமர் மோடி தாக்கு
நல்ல நோக்கங்கள் கொண்டவர்களை வாக்காளர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என உத்தரகாண்டில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அல்மோரா,
70 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டமன்றத்துக்கு வரும் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
உத்தரகாண்டின் அல்மோரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினர். பிரதமர் மோடி பேசியதாவது:- உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அங்கு பாஜக மிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதில் எங்களை விட மக்கள் உறுதியாக உள்ளனர். நல்ல நோக்கங்கள் கொண்டவர்களை வாக்காளர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
கடந்த அரசாங்கள் எல்லையோர கிராமங்கள், வட்டங்கள் மாவட்டங்களை புறக்கணித்தன. எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்காக பாஜக தெளிவான திட்டம் வகுத்தது. எல்லையோர பகுதிகளுக்காக ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்தோம். இந்த தசாப்தம் உத்தரகாண்டிற்கானது. எனவே, இதை உத்தரகாண்ட் மக்கள் நழுவ விட்டுவிடக்கூடாது.
அனைவருக்கும் வளர்ச்சி என்ற நோக்கத்தில் எங்கள் அரசாங்கம் பணியாற்றி வருகிறது. ஆனால், அனைவரையும் பிரிக்க வேண்டும், சேர்ந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கையாக உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story