மாசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு


மாசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 3:09 PM IST (Updated: 12 Feb 2022 3:09 PM IST)
t-max-icont-min-icon

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 12-ந் தேதி (இன்று) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. இதனை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நாளை அதிகாலை முதல் 17 ஆம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story