ஹிஜாபை தொட முயல்பவர்களின் கைகளை வெட்டுவோம்: சமாஜ்வாதி கட்சி தலைவர் சர்ச்சை பேச்சு


ஹிஜாபை தொட முயல்பவர்களின் கைகளை வெட்டுவோம்: சமாஜ்வாதி கட்சி தலைவர் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2022 5:19 PM IST (Updated: 12 Feb 2022 5:19 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாபைத் தொட முயற்சிப்பவர்களின் கைகள் வெட்டப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் ரூபினா கானம் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அலிகார்,

கர்நாடகாவில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவற்கு தடை விதித்துள்ளதால்  இப்பிரச்சினை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு எட்டியுள்ளது. இந்நிலையில் அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தின் மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று  போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இன்று உத்திரபிரதேச  சமாஜ்வாதி கட்சித் தலைவர் ரூபினா கானம் ”ஹிஜாபைத் தொட முயற்சிப்பவர்களின் கைகள் வெட்டப்படும்” என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது.

இது குறித்து பேசும் போது ரூபினா கானம் கூறியதாவது :-

 “இந்தியாவின் மகள்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியத்துடன் விளையாட முயற்சித்தால், அவர்கள் ஜான்சி ராணி மற்றும் ரஷியா சுல்தானா போல மாறி, ஹிஜாப்களை தொடுபவர்களின் கைகளை வெட்டுவதற்கு அதிக காலம் வேண்டாம்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஒரு நபர் நெற்றியில் திலகம் வைத்திருப்பதா அல்லது தலைப்பாகை அல்லது ஹிஜாப் அணிந்தவரா என்பது முக்கியமல்ல.

தலைப்பாகை மற்றும் ஹிஜாப் ஆகியவை இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளின் ஒருங்கிணைந்த ஒன்றாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை அரசியலாக்குவதன் மூலம் சர்ச்சையை உருவாக்குவது பயங்கரமானது, எந்தக் கட்சியினர் ஆட்சியை நடத்தினாலும் பெண்களை பலவீனமாகக் கருதி யாரும் தவறு செய்யக்கூடாது என்றுகூறினார்.


Next Story