கேரளாவில் மேலும் 15,184- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,184- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,184- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 427 பேர் உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 63 லட்சத்து 96 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62,053- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 38,819- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 61 லட்சத்து 52 ஆயிரத்து 076- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 81 ஆயிரத்து 347- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 73,965- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story