பணக்கார பெண்களுடன் பழக விரும்புகிறீர்களா? பேப்பரில் விளம்பரம் கொடுத்து ரூ. 60 லட்சம் சுருட்டிய பெண்..!
பெண் ஒருவர், நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்து ரூ. 60 லட்சம் வரை ஏமாற்றி பெற்றுள்ளார்.
புனே,
மராட்டிய மாநிலத்தில் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்து ரூ. 60 லட்சம் ஏமாற்றியதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 28 வயது பெண் ஒருவரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் நாளிதழில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்காக நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்த நபர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் தொடக்கத்தில் பாதுகாப்பிற்காக ரூ.2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பலமுறை அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். இதுவரை ரூ.60 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அந்த நபர் போலீசில் புகாரளித்துள்ளார். தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் வங்கி கணக்கு விவரங்களின் அடிப்படையில், அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண் வானவாடியில் வசித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பெண் இதேபோல் வேறு யாரையாவது ஏமாற்றியிருக்கிறாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story