பஞ்சாப் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீத ஒதுக்கீடு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி


பஞ்சாப் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீத ஒதுக்கீடு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
x
தினத்தந்தி 13 Feb 2022 11:28 PM IST (Updated: 13 Feb 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் வரும் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சண்டிகார், 

பஞ்சாபில் வரும் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக பஞ்சாப் மாநில வேலைவாய்ப்புகளில் பஞ்சாப் இளைஞர்களுக்கு 75 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும், தனியார் வேலைவாய்ப்புகளிலும் 50 சதவீத ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் பட்டப்படிப்பு முடித்த முதல் 2 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் நிதிஉதவி, பெண்களுக்கு அரசு வேலையில் 35 சதவீத ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்று உள்ளன. மாநில உள் கட்டமைப்பு மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்கொடுமைகளை உடனே விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. பஞ்சாபில் முன்னாள் முதல்-மந்தரி அமரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின் சன்யுக்த் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பா.ஜனதா கட்சி, சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறது.

Next Story