மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 கோடி போதைப்பொருள் பறிமுதல்


மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Feb 2022 11:30 PM IST (Updated: 13 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்ேபரில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ராவண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணின் உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில், டிராலி பைகளில் மஞ்சள் கலரில் பவுடர் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். பரிசோதனையில் அவை ஹெராயின் மற்றும் மெத் என்ற போதைப்ெபாருள் என்பது தெரியவந்தது.

சுமார் 7 கிலோ எடையுள்ள அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.60 கோடி ஆகும். இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்பெண்ணை, சாகர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story