ராகுல்காந்தியை நான் கேள்வி கேட்டது தவறா? அசாம் முதல்-மந்திரி விளக்கம்
ராணுவ வீரர்களை கேள்வி கேட்பது நமது பாரத தாயை அவமதிப்பது போன்றது.
கவுகாத்தி,
கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆதாரம் ேகட்டிருந்தார். அதற்கு அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, சர்ச்சைக்குரியவகையில் ராகுல்காந்தியை விமர்சித்து இருந்தார். அதனால் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தனது கருத்தை ஹிமந்த பிஸ்வா சர்மா நியாயப்படுத்தி உள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக நான் நிற்பது தவறா? அவர்களது தேசபக்தியை கேள்வி கேட்கக்கூடாது. அவர் நாட்டுக்காக செயல்பட்டதற்கு ஆதாரம் கேட்கக்கூடாது. ராணுவ வீரர்களை கேள்வி கேட்பது நமது பாரத தாயை அவமதிப்பது போன்றது.
பிபின் ராவத், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து அவரது திறன் குறித்து காங்கிரசார் விமர்சித்து வந்தனர். ராணுவத்தை அவமதித்ததற்காக நான் அவர்களை கேள்வி கேட்டது தவறா? இது புதிய இந்தியா. எனவே, இதுபோன்ற செயல்களை இனியும் சகித்துக் கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story