உத்தரபிரதேசம், கோவா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்


உத்தரபிரதேசம், கோவா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2022 7:03 AM IST (Updated: 14 Feb 2022 7:10 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசம், கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

உத்தரபிரதேச தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கோவாவில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கோவாவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Next Story