உத்தரகாண்ட் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
உத்தரகாண்டில் மொத்தம் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. உத்தரகாண்டை போல உத்தரபிரதேசம் (2-ம் கட்டம்), கோவாவிலும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story