15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி - மத்திய சுகாதார மந்திரி தகவல்
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 3-ந்தேதி தொடங்கியது.
இந்நிலையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா தொற்றை எதிர்த்து இளம் இந்தியா முழு சக்தியுடன் போராடுகிறது. நாடு முழுவதும் இதுவரை 1.5 கோடிக்கு மேற்பட்ட 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
15 முதல் 18 வயதினரில் இதுவரை 70 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைப்பதிவாளர் வெளியிட்டுள்ள தகவல்படி, 15-18 வயது பிரிவினர் 7.4 கோடி பேருக்கு 2021-22-ம் ஆண்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
Related Tags :
Next Story