நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,155 கோடி நிதி விடுவிப்பு


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,155 கோடி நிதி விடுவிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 8:33 AM IST (Updated: 15 Feb 2022 8:33 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,155 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திர பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.1,154.90 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அதிகபட்சமாக பீகார் மாநிலத்திற்கு 769 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்திற்கு 225 கோடியே 60 லட்சம் ரூபாய், குஜராத் மாநிலத்திற்கு 165 கோடியே 30 லட்சம் ரூபாய் மற்றும் சிக்கிம் மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிதியையும் சேர்த்து 2021-22 ஆம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக மொத்தம் 9 ஆயிரத்து 172 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 741 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story