நாடாளுமன்ற செயல்பாடுகளை ஒளிபரப்பும் சன்சத் டிவி-யின் யூடியூப் பக்கம் முடக்கம்
நாடாளுமன்ற செயல்பாடுகளை ஒளிபரப்பும் சன்சத் டிவி-யின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் நடைபெறும் விவாதங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை மத்திய அரசின் சன்சத் டிவி ஒளிபரப்பு செய்கிறது. சன்சத் டிவி யூடியூபிலும் ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிலையில், சன்சத் டிவி-யின் யூடியூப் பக்கத்தை இன்று மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால், சன்சத் டிவி-யின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டது. யூடியூபின் நெறிமுறைகளை மீறியதால் இந்த பக்கம் (சன்சத் டிவி) முடக்கப்படுவதாக யூடியூபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சன்சத் டிவியின் பெயர் ’இத்ரியம்’ என பெயர்மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை தொடர்ந்து சன்சத் டிவி-யின் யூடியூப் பக்கத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு குறைகள் தீர்க்கப்பட்டு விரைவில் சன்சத் டிவியின் பக்கம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
சன்சத் டிவி-யை ஹேக் செய்தது யார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story