சபரிமலை கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்து; 3 பக்தர்கள் உயிரிழப்பு


சபரிமலை கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்து; 3 பக்தர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 2:37 PM IST (Updated: 15 Feb 2022 2:37 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.



கோழிக்கோடு,


கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் இருந்து 14 பக்தர்கள் டெம்போ வேன் ஒன்றில் சாமி தரிசனம் செய்வதற்காக கேரளாவில் உள்ள 
சபரிமலை கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களது வாகனம் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் பூலாடிகிண்ணு என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் பக்தர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.  4 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தினேஷ், சிவண்ணா மற்றும் நாகராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story