தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து; போலீஸ்காரரை அடித்து, உதைத்த கும்பல்
உத்தர பிரதேசத்தில் தேர்தல் பணி முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பியபோது பைக் மீது மோதிய போலீஸ்காரரை கும்பல் ஒன்று அடித்து உதைத்த வீடியோ வைரலானது.
மொரதாபாத்,
உத்தர பிரதேசத்தில் சட்டசபைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மொரதாபாத் மாவட்டத்தில் தேர்தல் பணியை முடித்து கொண்டு தனது காரில் போலீஸ்காரர் ஒருவர் திரும்பியுள்ளார்.
அவரது கார், பைக் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் அந்த பைக்கில் இருந்த நபர் காயமடைந்து உள்ளார். எனினும், இதன்பின்னர் அவர் வீடு திரும்பி விட்டார். ஆனால், சம்பவ பகுதியில் இருந்த கும்பல் ஒன்று போலீஸ்காரரை அடித்து, உதைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
அந்த கும்பலை தேடும் பணி மற்றும் அவர்களை அடையாளம் பணி நடந்து வருகிறது. விபத்தில் காயமடைந்த நபர் ஏதேனும் புகார் ஒன்றை அளித்தால் அதுபற்றி போலீஸ்காரரிடம் விசாரணை நடத்தப்படும் என மொரதாபாத் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் கூறியுள்ளார்.
காவலர் மற்றும் காரை அடித்து நொறுக்கிய மக்கள் - சமூக வலைதளத்தில் பரவும் பரபரப்பு காட்சிhttps://t.co/YiNHP7Fi2O
— Thanthi TV (@ThanthiTV) February 15, 2022
Related Tags :
Next Story