காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப் மக்கள் பிரியா விடை அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி
பஞ்சாபில் காங்கிரஸ் கொள்ளையடித்தால், டெல்லியில் ஆம் ஆத்மி ஊழல் செய்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
சண்டிகர்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பதான்கோட் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பஞ்சாப்பில் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தகுதி வாய்ந்தோரில் ஏறத்தாழ அனைவருக்கும் முதல்டோஸ் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.உலக நாடுகள் சாதிக்க முடியாததை இந்தியா செய்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் ஏழைகள் யாரும் பசியுடன் உறங்க செல்வதை தடுத்தோம். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. பதன்கோட் தாக்குதலின் போது, நமது படைகள் மீது சந்தேகம் தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, காங்கிரஸ் தரம் தாழ்ந்து செயல்பட்டது.
வேளாண் மற்றும் வர்த்தகம் போன்றவை மேம்படுத்தப்படும். காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் காப்பியே ஆம் ஆத்மி. பஞ்சாபில் காங்கிரஸ் கொள்ளையடித்தால், டெல்லியில் ஆம் ஆத்மி ஊழல் செய்கிறது. ஒருவருக்கொருவர் எதிராக நடிக்கிறார்கள். ரிமோட் கண்ட்ரோல் குடும்பமான காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப்பில் மக்கள் பிரியா விடை அளிக்க வேண்டும். எங்கெல்லாம் அமைதி உள்ளதோ அங்கெல்லாம், காங்கிரசுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது.
உங்களுக்காக 5 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு தாருங்கள். வேளாண்மை, வணிகம், தொழில் ஆகியவை லாபகரமாக மாறும் என நான் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story