அசாம் : கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்க்கு முரணனான ஊர் பெயர் மாற்றம்..!
அசாமில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்க்கு ஒத்துப்போகாத ஊர் பெயர்களை மாற்றுவதற்க்கான பரிந்துரைகளை வழங்க புதிதாக வலைதளம் உருவாக்கப்படுவதாக அம்மாநில முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அசாம்,
அசாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்க்கு முரணனான ஊர்களின் பெயர்களை மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அசாம் மாநில முதல் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது,
கவுகாத்தியில் உள்ள கலாபஹர் என்ற ஊர் வங்காள ஜெனரல் சுல்தானேட் கலாபஹாட்டின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. இவர் தான் அங்குள்ள புகழ்பெற்ற சக்திபீட் காமாக்யா கோவில் தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்.
ஒரு நகரம் அல்லது கிராமத்தின் பெயர் அங்குள்ள மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஆகையால் இது போன்ற கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்க்கு முரணான இடங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் இது குறித்தான பரிந்துரைகளை வழங்க தனியாக ஒரு வலைதளம் உருவாக்கபட்டுள்ளது.
எனவே பெயர் மாற்றுவதற்க்கான பரிந்துரையை பொதுமக்கள் இந்த இணையதளத்தில் தெரிவிக்கலாம் என முதல் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
Related Tags :
Next Story