கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடலாம் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடலாம் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2022 5:29 PM IST (Updated: 16 Feb 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு, பாதிப்பு விகிதம், ஆஸ்பத்திரி சேர்க்கை என எல்லாமே குறைந்து வருகிறது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 27 ஆயிரத்து 409- ஐ விட அதிகமாகும். 

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள செய்தியில்,

நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் போக்கைக் காட்டுவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம், கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடுவது பயனுள்ளதாக இருக்கும் என மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story