உக்ரைனில் இருந்து நாடு திரும்புவோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உக்ரைனில் விமான டிக்கெட்டுகளை ஆராய்ந்து நம்பத்தகுந்த இடங்களில் பெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளை மீண்டும் முகாம்களுக்கு ரஷ்யா திரும்ப அழைத்தது. ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸ் ரஷ்ய பயணத்தின் முன்னோட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ரஷ்யாவின் தாக்குதல் இன்னமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஒரு லட்சம் வீரர்களை எல்லையில் குவித்துள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பதால்உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையில் இந்தியர்களை தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் விமான டிக்கெட்டுகளை ஆராய்ந்து நம்பத்தகுந்த இடங்களில் பெற வேண்டும் எனவும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய விமானங்கள் போதிய அளவில் இயக்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனுக்கான இந்திய தூதரகத்தின் டுவிட்டர், முகநூல் பக்கங்களில் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story