எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை? - பட்டியலை வெளியிட்ட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்களுக்கு தடை என்றும் பிளாஸ்டிக் கூடை, ஐஸ்க்ரீம் குச்சிகள், தெர்மோகோல் ஆகியவற்றுக்கு தடை.
அதேபோல் பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், பத்திரிகைகள், சிகரெட் அட்டைகளுக்கும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்களுக்கும் தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30-ஆம் தேதிக்குள் வணிகர்கள் தங்கள் வணிக நிறுவனத்தில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
Related Tags :
Next Story