ராஜஸ்தானில் பள்ளி பேருந்து விபத்து: 2 மாணவர்கள் உயிரிழப்பு.!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Feb 2022 3:20 PM IST (Updated: 17 Feb 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.


ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பால்சுந்தா பகுதியில் பள்ளி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த திடீர் விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story