கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி - மணிப்பூர் பாஜக தேர்தல் அறிக்கை
கல்லூரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என மணிப்பூர் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
சண்டிகர்,
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மறுபக்கம் மணிப்பூரில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
அதில், கல்லூரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.25,00 ஊக்கத்தொகை வழங்கப்படும். 12-ஆம் வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், சிறு, நடுத்தர மற்றும் நிலமற்ற விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்கல்வி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பென்சன் 1000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது.
இதனிடையே. மணிப்பூரில் 2002 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் ஆட்சி செய்தது. 2017 தேர்தலிலும் காங்கிரஸ் தேவையான இடங்களைப் பெற்றிருந்தது.
ஆனாலும் ஆட்சியைப் பாஜக பிடித்தது. மணிப்பூரில் பாஜக இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ்-54, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலா ஓரிடத்திலும் போட்டியிடுகின்றன.
இவை தவிர, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களம் காண்கின்றன.
எனவே மணிப்பூர் தேர்தல் களத்தில் களத்தில் பல கட்சிகள் இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் கூட்டணிக்கு இடையேதான் பலமான போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story