டெல்லியில் கேட்பாரற்று கிடைந்த பையில் வெடிகுண்டு


டெல்லியில் கேட்பாரற்று கிடைந்த பையில் வெடிகுண்டு
x
தினத்தந்தி 17 Feb 2022 7:49 PM IST (Updated: 17 Feb 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி பழைய சீமாபுரி பகுதியில் உள்ள வீட்டில் பையில் வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பழைய சீமாபுரி பகுதியில் உள்ள வீட்டில் சந்தேகப்படும்படியான பையில் ஐ.இ.டி. வெடிகுண்டு 
இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். 

வீட்டில் கிடந்த பையிலுள்ள வெடிகுண்டை செயலிழக்க செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து அதனை பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியில்  வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செயலிழக்கச் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

Next Story