குஜராத்தில் கூடுதலாக 7 மீன்பிடி படகுகளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை


குஜராத்தில் கூடுதலாக 7 மீன்பிடி படகுகளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை
x
தினத்தந்தி 17 Feb 2022 11:59 PM IST (Updated: 17 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் கூடுதலாக 7 மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.


புதுடெல்லி,


குஜராத்தின் பூஜ் நகரில் ஹராமி நல்லா பகுதியில் கடந்த 9ந்தேதி 11 மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கைப்பற்றினர்.  அந்த படகுகளில் இருந்த 6 பாகிஸ்தானிய மீனவர்களையும் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையில் இந்திய விமான படை மற்றும் ராணுவ வீரர்களின் உதவியுடன் பி.எஸ்.எப். வீரர்கள் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குஜராத்தின் பூஜ் நகரில் ஹராமி நல்லா பகுதியில் நேற்று (வியாழ கிழமை) 7 மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.  அந்த படகுகளில் இருந்த அழுகிய மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


Next Story