புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க கவர்னர் தலைமையில் ஆலோசனை
புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிப்பது தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகளை அதிகரிக்க...
புதுவைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாகவே உள்ளது.
எனவே வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்த சீராய்வு கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
மேம்பாட்டு பணிகள்
கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுற்றுலாத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், நிதித்துறை செயலாளர் பிரசாந்த் கோயல், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷிணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து படக்காட்சி மூலம் துறை அதிகாரிகள் விளக்கினர். பின்னர் மேம்பாட்டு பணிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story