கொரோனா காலத்தில் சிறப்பான சேவை: பெங்களூரு விமான நிலையத்திற்கு சர்வதேச விருது
கொரோனா காலத்தில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமானம் நிலையம் உள்ளது. கொரோனா காலத்திலும் கூட பயணிகளுக்கு, பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் அனைத்து வசதிகள், சேவைகளை வழங்கியது.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் பயணிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் சபை (ஏ.சி.ஐ.) சார்பாக "வாய்ஸ் ஆப் தி கஸ்டமர்" எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் பயணிகளின் குறைகளை கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. அத்துடன் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்ட விருது ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story