மேற்குவங்காள கவர்னரை நீக்கக்கோரிய வழக்கு - தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு


மேற்குவங்காள கவர்னரை நீக்கக்கோரிய வழக்கு - தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 18 Feb 2022 12:58 PM IST (Updated: 18 Feb 2022 12:58 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கரை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில், கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையில், மேற்குவங்காள கவர்னர் பதவியில் இருந்து ஜக்தீப் தங்கரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ள ராம பிரசாத் சர்கார் தாக்கல் செய்த ரிட் மனுவில், கவர்னர் ஜக்தீப் தங்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும், அவர் பாஜகவின் குரலாக பேசி வருவதாகவும் தனது மனுவில் தெரிவித்தார். இதனால், ஜக்தீப் தங்கரை மேற்குவங்காள கவர்னர் பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டக்கோரி இந்த மனு தாக்கல் செய்தார். 

இந்த ரிட் மனுவை இன்று விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கரை நீக்கக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறு வழக்கை தள்ளுபடி செய்தது.   

Next Story