குடிபோதையில் பெண் போலீசாரை தாக்கிய நடிகை காவ்யா தபார் கைது..!


குடிபோதையில் பெண் போலீசாரை தாக்கிய நடிகை காவ்யா தபார் கைது..!
x
தினத்தந்தி 18 Feb 2022 8:05 PM IST (Updated: 18 Feb 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தட்டி கேட்ட பெண் போலீசாரை தாக்கிய நடிகை காவ்யா தபார் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே நேற்று கார் விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கார் டிரைவர் விபத்து ஏற்படுத்திய பெண்ணிடம் தட்டி கேட்ட அவரை தாக்கியதாக தெரிகிறது. இதன் பேரில் அந்த டிரைவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த நிர்பயா போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இதில் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெண் போலீசார் காரை ஓட்டி வந்த பெண்ணிடம் விசாரித்தனர்.

இதில் கார் ஓட்டி வந்தது தென்னிந்திய மாடல் அழகியான நடிகை காவ்யா தபார் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணையின் போது நடிகை காவ்யா தபார் பெண் போலீசாரின் சீரூடையை பிடித்து இழுத்து தாக்கி உள்ளார். இந்நிலையில் பெண் போலீசாரை தாக்கிய நடிகை காவ்யா தபாரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு நடத்திய பரிசோதனையில் அதிக மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இவர் ஒரு விருந்தில் கலந்து கொண்ட அவர் நண்பருடன் திரும்பி சென்ற போது விபத்து நடந்ததாக ஜூகு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நடிகை காவ்யா தபார் இந்தி மற்றும், தெலுங்கு படங்களிலும் மார்க்கெட் ராஜா என்ற தமிழ் படத்திலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story