நடப்பு நிதி ஆண்டில் நகை, ரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடி இலக்கை எட்டும்: பியூஸ் கோயல்
நடப்பு நிதி ஆண்டில் நகை, ரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடி இலக்கை எட்டும் என்று பியூஸ் கோயல் பேசினார்.
நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்த இந்திய சர்வதேச நகை கண்காட்சி நேற்று தொடங்கியது. அதில் மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-
இந்திய பொருளாதாரத்தின் வலிமையான தூணாக நகை மற்றும் ரத்தினங்கள் தொழில்துறை விளங்குகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த தொழிலின் பங்கு 7 சதவீதம் ஆகும். நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாதம்வரை நகை மற்றும் ரத்தினங்களின் ஏற்றுமதி 32 பில்லியன் டாலராக (ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி) உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதன் ஏற்றுமதியை 40 பில்லியன் டாலராக (ரூ.3 லட்சம் கோடி) இலக்கு நிர்ணயித்துள்ளோம். நிதி ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கையும் தாண்டி ஏற்றுமதி பெருகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story