லஷ்கர் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசிய ஆவணங்களை அளித்த ஐ.பி.எஸ் அதிகாரி கைது
லஷ்கர் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசிய ஆவணங்களை அளித்த ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் திக்விஜய் நேகி கைது செய்யப்பட்டார்.
தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் திக்விஜய் நேகி நேற்று கைது செய்யப்பட்டார். இவர் 2011-ம் ஆண்டு, பதவி உயர்வு மூலம் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்றவர். என்.ஐ.ஏ.வில் இருந்து மாற்றப்பட்டு, சிம்லாவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கம் நாசவேலையில் ஈடுபட உதவி செய்பவர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அதில், ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் திக்விஜய் நேகி தொடர்பு பற்றி தெரியவந்தது. அவரது வீட்டை என்.ஐ.ஏ. சோதனையிட்டது.அப்போது, ரகசிய ஆவணங்களை லஷ்கர் இயக்கத்தின் ஆதரவாளரிடம் அவர் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று அவரை என்.ஐ.ஏ. கைது செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story