புதுச்சேரியில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


புதுச்சேரியில் புதிதாக 50 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 19 Feb 2022 3:00 AM IST (Updated: 19 Feb 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


புதுச்சேரி,


புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சமீப நாட்களாக குறைந்து வருகிறது.  புதுச்சேரியில் நேற்று முன்தினம் 1,884 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  அவர்களில் 50 பேருக்கு தொற்று உறுதியானது. இது மொத்த பரிசோதனையில் 2.65 சதவீதமாகும்.

புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதித்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 989 பேர் குணமடைந்துள்ளனர். இதன் சதவீதம் 98.46 ஆகும். தொற்று பாதித்தவர்களில் 32 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 554 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 27 ஆயிரத்து 320 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அவர்களில், 6 லட்சத்து 21 ஆயிரத்து 577 பேர் இரு தவணை தடுப்பூசிகளும், 11,738 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 831 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.


Next Story