எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; அமித்ஷா பேச்சு


எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2022 3:54 AM IST (Updated: 19 Feb 2022 3:54 AM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.



புதுடெல்லி,


ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பாதுகாப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.  இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.  அவரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, மத்திய உள்துறை மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது, கடந்த 2018ல் ஜம்மு காஷ்மீரில் 417 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.  2021ல் இந்த எண்ணிக்கை 229 ஆக குறைந்துள்ளது.  2018ல் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 91 வீரர்கள் பலியாகி இருந்தனர். இந்த எண்ணிக்கை 2021ல் 42 ஆக குறைந்துள்ளது.

ஆனாலும் பயங்கரவாதத்தை அறவே ஒழிக்க, ஊடுருவலை முற்றிலும் தடுக்க வேண்டும்.  எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story