பஞ்சாபில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,100 நிதியுதவி; தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதி


பஞ்சாபில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,100 நிதியுதவி; தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதி
x
தினத்தந்தி 19 Feb 2022 4:15 AM IST (Updated: 19 Feb 2022 6:43 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

சண்டிகார், 

பஞ்சாபில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதிநாளான நேற்று ஆளும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய இந்த அறிக்கையை மாநில காங்கிரஸ் தலைவர் சித்து வெளியிட்டார். 

இந்த அறிக்கையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,100 நிதியுதவி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டு இருந்தது. இதைத்தவிர ஆண்டுக்கு 8 இலவச கியாஸ் சிலிண்டர்கள், 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கம் போன்றவையும் வாக்களிக்கப்பட்டு இருக்கிறது. 

மதுபான மாபியாக்களை தடுக்க அரசு கழகம் உருவாக்கப்படும் எனவும், மணல் குவாரிகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. விவசாயிகளிடம் இருந்து எண்ணெய் வித்துகள், பருப்புகள், சோளம் போன்றவற்றை அரசே கொள்முதல் செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய சித்து, காங்கிரஸ் கட்சியின் இந்த 13 அம்ச செயல்திட்டமானது ராகுல் காந்தியின் தொலைநோக்கு பார்வையை எதிரொலிப்பதாக கூறினார்.

Next Story