கிருஷ்ணா நதி நீர் வழக்கு; பேச்சுவார்த்தை மூலம் ஏன் தீர்வு காணக்கூடாது? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


கிருஷ்ணா நதி நீர் வழக்கு; பேச்சுவார்த்தை மூலம் ஏன் தீர்வு காணக்கூடாது? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2022 4:33 AM IST (Updated: 19 Feb 2022 4:33 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணா நதி நீர் பிரச்சினையை ஏன் சுமூகமாக பேசி தீர்க்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதுடெல்லி,

கர்நாடகா-மராட்டிய மாநிலங்களுக்கு இடையிலான கிருஷ்ணா நதி நீர் பங்கீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஷியாம் திவான், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் டி.ஒய்.சந்திர சூட், ஏ.எஸ்.போபண்ணா விலகி இருக்கின்றனர், எனவே புதிய அமைப்பை ஏற்படுத்தி விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர்.

அப்போது தலைமை நீதிபதி ரமணா, முறையீட்டை ஏற்பதாக கூறி, ஏன் இரு மாநிலங்களும் சுமூகமாக பேசி பிரச்சினையை தீர்க்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல் ஷியாம் திவான், குறிப்பிட்ட சில விஷயங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். ஆனால் பல அம்சங்கள் கொண்ட பிரச்சினையைத் தீர்க்க கோர்ட்டின் தலையீடு அவசியமாகிறது என குறிப்பிட்டார்.

Next Story