கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி: லாலு பிரசாத் யாதவுக்கு பிரியங்கா ஆதரவு மத்திய அரசு மீது குற்றச்சாட்டு


கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி: லாலு பிரசாத் யாதவுக்கு பிரியங்கா ஆதரவு மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Feb 2022 5:20 AM IST (Updated: 19 Feb 2022 5:20 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் மேலும் ஒரு கால்நடை தீவன வழக்கில், முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சமீபத்தில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு ஒன்று தீர்ப்பளித்தது.

புதுடெல்லி, 

பீகாரில் மேலும் ஒரு கால்நடை தீவன வழக்கில், முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சமீபத்தில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு ஒன்று தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள ஆஸ்பத்திரியிலேயே சிறை வைக்கப்பட்டு உள்ளார். 73 வயதான நிலையிலும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு உள்ள லாலு பிரசாத் யாதவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆதரவு தெரிவித்து உள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் அவர் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பா.ஜனதாவுக்கு முன் மண்டியிட மறுப்போரை அனைத்து வழிகளிலும் துன்பப்படுத்தும் பா.ஜனதாவின் அரசியலில் இது ஒரு முக்கியமான அம்சம். இந்த அரசியல் காரணமாகத்தான் லாலு பிரசாத் ஜி தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். நிச்சயம் அவர் நீதியை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்’ என குறிப்பிட்டு உள்ளார்.

Next Story