நடிகை சன்னிலியோனின் பான் எண் மூலம் கடன் பெற்று மோசடி


நடிகை சன்னிலியோனின் பான் எண் மூலம் கடன் பெற்று மோசடி
x
தினத்தந்தி 19 Feb 2022 10:29 AM IST (Updated: 19 Feb 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon

நடிகை சன்னிலியோன் தனது பான் எண்ணைப் பயன்படுத்தி கடன் பெற்று மோசடி நடந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி,

தானி கடன்கள் மற்றும் சேவைகள் என்னும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் தனிநபர் கடன் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை வழங்கி வருகிறது. மேலும் இதில் கடன் பெற பான் கார்டு மற்றும் முகவரி சான்று மூலம் உடனடியாக பணம் பெறலாம் என தனது விளம்பரத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சில மோசடிகாரர்கள் நடிகை சன்னிலியோன் பான் எண் பயன்படுத்தி ரூபாய் 2000 கடன் பெற்றுள்ளனர். இதனால் தனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படுள்ளதாகவும் மேலும் இது குறித்து அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது சரியாக பதிலளிக்கவில்லை எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது போன்று தானியில் கடன் பெற பலரின் அடையாள விவரங்கள் அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பலர் ட்வீட்களை பகிர்ந்துள்ளனர்

Next Story