கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு, ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு கச்சத்தீவு மத ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். பல்வேறு ஆண்டுகளாக அவர்கள் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள் இல்லாமல், அடுத்த மாதம் 11-ந்தேதி மற்றும் 12-ந்தேதிகளில் அந்தோணியார் தேவாலய திருவிழாவினை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறிப்பாக தமிழக மீனவர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story