2 மாநில தேர்தல்: 9 மணி நிலவரம் உ.பி - 8.15%, பஞ்சாப் - 4.80%


2 மாநில தேர்தல்: 9 மணி நிலவரம் உ.பி - 8.15%, பஞ்சாப் - 4.80%
x
தினத்தந்தி 20 Feb 2022 9:47 AM IST (Updated: 20 Feb 2022 9:47 AM IST)
t-max-icont-min-icon

உத்தரப்பிரதேசத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 8.15% பஞ்சாப் - 4.80% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி,3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதைப்போல்,பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் சற்று முன்னதாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இத்தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. அதன்படி,இத்தேர்தலில் 1304 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.14 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில்,  உத்தரப்பிரதேசத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி, 8.15 சதவிகிதமும், பஞ்சாப் - 4.80 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  2 மாநிலத்திலும் இதுவரை எந்தவித அசாம்பாவிதமும் நடைபெற வில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரு மாநிலத்திலும் மக்கள் விறுவிறுப்புடன் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர். 

Next Story