ராஜஸ்தான்: ஐ.பி.எஸ். அதிகாரி குதிரை ஊர்வலம் செல்ல போலீஸ் பாதுகாப்பு
ராஜஸ்தான் பண்டி மாவட்டத்தில் பட்டியிலனத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் திருமணத்தன்று பட்டியலினத்தவர்கள் குதிரை ஊர்வலம் செல்ல குறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின ஐ.பி.எஸ். அதிகாரி தன்வந்தா, திருமணத்தன்று குதிரையில் செல்ல பாதுகாப்பு கோரி இருந்தார்.
தாம் ஐ.பி.எஸ். அதிகாரி என்றாலும், சொந்த கிராமத்தில் சாதி ரீதியான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் முழு பாதுகாப்புடன் ஐ.பி.எஸ் அதிகாரியின் குதிரை ஊர்வலம் நடைபெற்றது.
ஐபிஎஸ் அதிகாரி என்றாலும் சொந்த கிராமத்தில் சாதி ரீதியான அச்சுற்றுத்தல் இருப்பதால் திருமணத்தன்று குதிரையில் செல்ல பாதுகாப்பு கோரியிருந்தார் ஐபிஎஸ் அதிகாரி தன்வந்தா
Related Tags :
Next Story