எங்களது இந்துத்துவா தவறான அரசியலை போதிக்கவில்லை- உத்தவ் தாக்கரே பேட்டி
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்திரசேகர் ராவ் சந்தித்தார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள், முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் சந்திரசேகர் ராவ். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில், இன்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்திரசேகர் ராவ் சந்தித்தார். மும்பையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். சந்திரசேகர் ராவ் கூறுகையில், “ நாங்கள் இருவரும் சகோதரரைப் போன்றவர்கள். இரு மாநிலங்களும் ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. மராட்டிய அரசின் ஒத்துழைப்புடன் நாங்கள் காலெஷ்வரம் திட்டத்தை செயல்படுத்தினோம். மராட்டிய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளோம்” என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உத்தவ் தாக்கரே கூறியதாவது:- எங்களின் இந்துத்வா தவறான அரசியலை போதிக்கவில்லை. நாடு நரகத்திற்கு சென்றாலும் சிலர் தங்களின் மட்டுமே பணியாற்றுகின்றனர். நாட்டை சரியான பாதைக்கு நாங்கள் கொண்டு செல்வோம். பிரதமர் யார் என்பதை பின்னர் விவாதிக்கலாம்” என்றார்.
Related Tags :
Next Story