மே மாதம் முதல் நேபாளத்திலும் இந்திய யு.பி.ஐ. சேவை..!


மே மாதம் முதல் நேபாளத்திலும் இந்திய யு.பி.ஐ. சேவை..!
x
தினத்தந்தி 21 Feb 2022 12:36 AM IST (Updated: 21 Feb 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

மே மாதம் முதல் நேபாளத்திலும் இந்திய யு.பி.ஐ. சேவை அமலுக்கு வர உள்ளது.

காத்மாண்டு, 

இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றத்துக்காக யு.பி.ஐ. என்ற ஒருங்கிணைந்த மின்னணு பரிமாற்ற சேவை நடைமுறையில் உள்ளது. இதை பயன்படுத்தி, ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கும், வர்த்தகர்களுக்கும் பண பரிமாற்றம் செய்யலாம். பூடான், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளிலும் இந்திய யு.பி.ஐ. சேவை அமலில் உள்ளது.

இந்தநிலையில், அண்டை நாடான நேபாளத்திலும் மே மாதத்தில் இருந்து இந்திய யு.பி.ஐ. சேவை அமலுக்கு வருகிறது. தேசிய பண பரிவர்த்தனை கழகத்துக்கும், நேபாளத்தில் மின்னணு பரிமாற்றத்துக்கு உரிமம் பெற்றுள்ள தி கேட்வே பேமண்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால், இந்த சேவை அங்கு அமலுக்கு வருகிறது. 

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளில் ரூ.100 மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கு மேல் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், நேபாளத்துக்கு செல்லும் இந்தியர்கள் ‘கியூ ஆர்’ கோடை ஸ்கேன் செய்து மின்னணு பரிமாற்றம் செய்ய இந்த சேவை உதவும் என்று கருதப்படுகிறது.


Next Story