உடல்நல குறைவால் மேற்கு வங்காள மந்திரி மரணம்: தலைவர்கள் இரங்கல்


உடல்நல குறைவால் மேற்கு வங்காள மந்திரி மரணம்: தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 21 Feb 2022 9:08 AM IST (Updated: 21 Feb 2022 9:08 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேற்கு வங்காள மூத்த மந்திரி நேற்று உயிரிழந்ததை அடுத்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சதன் பாண்டே நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. ஓராண்டு காலமாக அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தநிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது.

2011-ம் ஆண்டுவரை, புர்டோலா தொகுதியில் தொடர்ந்து 5 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், பின்னர் மணிக்டலா தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல்நலம் சரியில்லாததால், ஓராண்டாக இலாகா இல்லாத மந்திரியாக இருந்தார். 

மந்திரியின் மறைவுக்கு, நீண்ட காலமாக ஒரு அற்புதமான உறவு இருந்தது. இந்த இழப்பால் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பான்ர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்புடன் பழகியவர் என்று கவர்னர் ஜெகதீப் தங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Next Story