பஜ்ரங் தள் நிர்வாகி கொல்லப்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது: மெகபூபா முப்தி


பஜ்ரங் தள் நிர்வாகி கொல்லப்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது: மெகபூபா முப்தி
x
தினத்தந்தி 21 Feb 2022 7:13 PM IST (Updated: 21 Feb 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பஜ்ரங் தள் நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் கடுமையாக கண்டித்தக்கது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி,  கர்நாடகாவில் பஜ்ரங் தள் நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். ஜம்முவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மெகபூபா முப்தி கூறியதாவது: 

“இது (கொலை) நடந்திருக்கக் கூடாது. இது மிகவும் சோகமானது” என்றார். இந்தக் கொடூரமான கொலையை கண்டிக்கிறீர்களா? என செய்தியாளர்கள் மெகபூபாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மெகபூபா முப்தி, “ நிச்சயமாக, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அது கடுமையாக கண்டித்தக்கது” என்றார். 


Next Story