அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு...!


அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு...!
x
தினத்தந்தி 22 Feb 2022 2:11 AM IST (Updated: 22 Feb 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதேநேரம் சிறப்பு ஏற்பாட்டின் மூலம் சுமார் 40 நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Next Story