ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வருடாந்திர சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந் தேதி தொடக்கம்
புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வருடாந்திர சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகின்ற 24-ந் தேதி தொடங்குகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி,
இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனுமான இராஜேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
இதன்படி வரும் 24-ந் தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகே மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவில் வளாகத்தில் பக்தகண்ணப்பர் கொடியேற்றமும், அதனை தொடர்ந்து 25-ந் தேதி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றமும் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாசிவராத்திரி விழா, மார்ச் 1-ந் தேதி நடைபெறுகிறது. மார்ச் 4-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 9-ந்தேதி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் மூலவர்ளுக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
மேற்கண்ட தகவல்களை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story