டெல்லியில் புதிதாக 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,57,015 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.96 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,106 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 411 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 18,28,542 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் தற்போது 2,367 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story