திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு...!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு...!
x
தினத்தந்தி 23 Feb 2022 5:56 AM IST (Updated: 23 Feb 2022 5:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தமாதம் (மார்ச்) தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

ரூ.300 கட்டண தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இதுவரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை ஒரு நாளைக்கு கூடுதலாக 13,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

இதேபோல், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில், தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கூடுதலாக 5,000 டோக்கன் வினியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story