புதுச்சேரி சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு!
புதுச்சேரியில் இன்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 26-ந்தேதி முதல் செப்டம்பர் -ந்தேதி வரை நடந்தது. அப்போது முழுமையான பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதிக்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதன்படி இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
சட்டசபை கூட்டம் கூடியதும் மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நீட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் திட்டமிட்டனர். அதன்படி, திமுக உறுப்பினர்கள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகளை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் சட்டசபை கூடிய 21 நிமிடங்களிலேயே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story