உ.பி. மக்கள்: ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
உத்தர பிரதேச மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ,7 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, உ.பி.யில் 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது .வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
4-ம் கட்ட தேர்தல் வாக்குபதிவில் ,காலை 9 மணி நிலவரப்படி 9.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என உத்தர பிரதேசத்தில் 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.
Related Tags :
Next Story