ஷாஜகானின் நினைவு தினம்: தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க 3 நாட்களுக்கு இலவச அனுமதி...!


ஷாஜகானின் நினைவு தினம்: தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க 3 நாட்களுக்கு இலவச அனுமதி...!
x
தினத்தந்தி 23 Feb 2022 11:47 AM IST (Updated: 23 Feb 2022 11:47 AM IST)
t-max-icont-min-icon

ஷாஜகானின் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க 3 நாட்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

முகலாய பேரரசர் ஷாஜகானின் 367-வது உர்ஸ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் பொது மக்கள் தாஜ்மகாலை இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பை ஆக்ரா தொல்பொருள் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தரைதளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளை காண மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொது மக்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story